
எல்லி அவ்ரம் இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் வெளியான பொன்னியின் செல்வன் படத்துடன் வெளியிடப்பட்டது அதனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை இருந்தாலும் இந்த படத்தில் வந்த சில கதாபாத்திரங்கள் மற்றும் இந்த படத்தின் இசை நன்றாக பேசப்பட்டு வந்தது அதிலும் குறிப்பாக இவர் நடித்த காட்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஸ்வீடனை சேர்ந்தவர் எல்லி அவ்ரம். அவரின் தாய் ஒரு நடிகை. ஸ்வீடனில் நடித்து வந்த எல்லி, மிக்கி வைரஸ் எனும் படம் மூலம் பாலிவுட் வந்தார். இந்தி படமான குயீனின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் நடித்தார் எல்லி. ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு எல்லிக்கு கிடைத்தது.பாலிவுட் படத்தில் நடித்த முதல் ஸ்வீடன் நாட்டு நடிகை எல்லி தான். நா பேரு சூர்யா, நா இல்லு இந்தியா எனும் தெலுங்கு படத்திலும், பட்டர்ஃபிளை எனும் கன்னட படத்திலும் நடித்திருக்கிறார்.
சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டு 70 நாட்கள் தாக்குப்பிடித்தார் எல்லி அவ்ரம்.