
ஷிவானி நாராயணன் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார்.இவர் பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கின்றார்.ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார் இவர் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் சரவணன் மீனாட்சி மூன்றாம் பகுதியில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் சின்ன திரையில் அறிமுகம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இவர் பகல் நிலவு என்ற தொடரில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதன் பிறகு ஜோடி அன்லிமிடெட் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய அசத்தலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பொதுவாக இவர் சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருவார்கள். அதனைப் போல் இவரும் கவர்ச்சியை காட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருவார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிலிருந்து வெளியே வந்தவுடன் இவருடைய கவர்ச்சி உச்சகட்டத்தை தொட்டது.இந்த நிலையில் தற்பொழுது சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் செய்வதற்காக தன்னுடைய கவர்ச்சியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாறுமாறாக வெளியிட்டு வருகிறார்.