
பிராணிதா சுபாஷ் தமிழ் தெலுங்கு கன்னடம் என்ற தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். 17 அக்டோபர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார். 2019 போக்கிரி என்னும் கன்னட மொழி திரைப்படத்தில் முதல் முறையாக நடித்த திரைப்படத்துறைக்கு அறிமுகமானார் அதை தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்து வந்தார்.
2011 ஆம் ஆண்டு உதயன் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார் ஆனால் அந்த திரைப்படம் விவரித்து ஒரு அங்கீகாரத்தை கொடுக்கவில்லை தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் சகுனி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.
தொடர்ந்து மீண்டும் கன்னடம்,தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து வந்தார் 2015 ஆம் ஆண்டு மாசு என்கிற மாசிலாமணி என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.