
அனுஷ்கா செட்டி பிரபல இந்தியா திரைப்பட நடிகை ஆவார் இவர் பெரும்பாலும் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் தான் நடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடிகர் மாதவனுடன் ரெட் என்ற திரைப்படத்தில் இரண்டாவது நடிகையாக நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் நடித்த அருந்ததி என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று அனுஷ்காவிற்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அருந்ததி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது.
கடந்த பத்து வருடங்களில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக உடல் எடை ஏறியதால் அனுஷ்காவிற்கு படம் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் இவரின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
இவர் ஆரம்பத்தில் படம் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்தார்.ஆனால் சினிமாவில் எப்படி நுழைய வேண்டும் என்பது தெரியாமல் இருந்தார். பள்ளிகளில் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்து கொண்டிருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் நாகார்ஜுனின் மகன் நாகா சைதனுக்கு யோகாசிரியராக பணிபுரிந்து சினிமா துறையில் உள்ளவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார் அதன் மூலமாக தான் சினிமாவிற்கு அனுஷ்கா வந்தார் என்று அனுஷ்காவின் ஆரம்ப கால வாழ்க்கையை பற்றி தகவல் வெளியானது.