
அனிகா சுரேந்திரன் மலையாளம்,தமிழ்,தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.ஆரம்பித்தில் குழந்தை நட்சத்திரமாக தனது பணியை தொடங்கி தற்பொழுது ஒரு நடிகையாக உருவெடுத்துள்ளார். தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்துவிட்டு 2015 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
தொடர்ந்து நானும் ரவுடிதான், மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தால் அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தின் விசுவாசம் என்ற திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தார் அந்த திரைப்படத்தின் மூலம் அதிக அளவு ரசிகர்கள் இவருக்கு இருந்தது.
இந்த படத்திற்குப் பிறகு 18 வயது முடிந்த பின்பு நடிகையாக நடிக்க வேண்டும் என்பதற்காக அழகான புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வந்தார் இதை பார்த்த ரசிகர்கள் சின்ன நயன்தாரா என்று அழைத்து வந்தனர்.தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் படுக்கை அறை காட்சிகள் லிப்லாக் கிஸ் போன்ற காட்சிகளில் நடித்திருந்தால் இதை பார்த்த ரசிகர்கள் நடித்த ஒரு படத்தில் இந்த அளவு கவர்ச்சி காட்டி விட்டாய் என்று விமர்சனங்களை வைத்து வந்தனர்.
அந்த விமர்சனங்களுக்கு அனிகா நான் இன்னும் சின்ன குழந்தை இல்லை எனக்கு 18 வயது ஆகிவிட்டது என்று கூறி அவர்களின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.