
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற தென்னிந்தியா மொழி திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் இதுவரை நான்கு முறை தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் தென்னிந்தியா பிலிம் பேர் விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் 1996 இல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அட்டகத்தி என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமாகி தற்பொழுது பல திரைப்படங்களில் நடித்த வருகிறார். குறிப்பாக சொல்லப் போனால் ரம்மி,காக்கா முட்டை,தர்மதுரை,கனா,நம்ம வீட்டு பிள்ளை போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.
என்னதான் இவர் சிறப்பாக நடித்தாலும் தனுஷ்,விஜய் சேதுபதி,சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது விஜய்,அஜித்,ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார்.
அந்தப் படங்கள் எதுவும் சரியா போகாததால் தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு வாய்ப்புக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இவரும் வெளியிட்டு வருகிறார்.