குருவியின் கூட்டிற்குள் நுழைந்த பாம்பு… ஒற்றுமையுடன் பாம்புடன் சண்டையிட்ட குருவிகள்… கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

நான்கு மாடுகள் ஒற்றுமையாக இருந்ததைப் பார்த்து சிங்கம் பயந்தது பற்றி பள்ளிக்கூட படத்திலேயே படித்திருக்கிறோம். அதை அப்படியே மெய்ப்பிக்கும்வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பாம்பு உடன் சண்டை போட்டு குருவிகள் அதைத் துரத்தி இருக்கின்றன.

கடவுளின் படைப்புப்படி ஒவ்வொரு உயிரினமும் இன்னொரு உயிரினத்தை வேட்டையாடி உணவாக்கும் சூழல் இருக்கின்றது. எலி பூனையை பார்த்து பயப்படுவதும், ஆடு, மான் ஆகியவை புலி, சிங்கத்தை பார்த்து பயந்து ஓடுவதும் இயற்கையானது தான். கானகத்தில் ஒவ்வொரு மிருகமும் சக மிருகத்தை வேட்டையாடி தான் வாழ்கிறது.

இங்கும் அப்படித்தான் ஒரு மரத்தில் தூக்கனாங்குருவி கூடு கட்டி இருந்தது. அந்த கூட்டில் அதன் முட்டை இருந்தது. இந்நிலையில் இந்த கூட்டுக்குள் முட்டையைக் குடிக்கும் நோக்கத்தோடு பாம்பு ஒன்று வந்தது. அதைப் பார்த்த தூகாணங் குருவிகள் இரண்டு, மூன்று சேர்ந்து பாம்பை போட்டு படுத்தி எடுத்துவிடுகிறது. சின்ன பிராணியான குருவிகள் பாம்பை போட்டு புரட்டி எடுப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கடைசி நடந்த சம்பவம் பாம்பு கூட்டைவிட்டு விரைந்து ஓடுகிறது. இதோ அந்த வீடியோ…