34 வருடங்களுக்கு முன்அதற்காக எடுத்த முதல் போட்டோ ஷூட் -அந்த புகைப்படங்களை பகிர்ந்த நதியா..!

1980களில் இருந்த தமிழ் சினிமா ஒரு பொற்காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கும் அதிகமான முக்கியத்துவம் கிடைத்தது.

பல நடிகைகளும் வலுவான கதாபாத்திரங்களில் நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். 80களில் எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும் அவர்களில் இருந்து தன்னை தனித்து காட்டியவர் நதியா.

அவரது ஆடை, அணிகலன்கள் பல பேஷனில் டிரெண்டாகி அவரது பெயருடன் சேர்த்து உச்சரிக்கும் அளவிற்குப் பிரபலமானார். நதியா கம்மல், நதியா டிரெஸ், நதியா வளையல் என அவ்வளவு பிரபலம்.

80களில் பல கடைகளின் காலண்டர்கள், பொங்கல் வாழ்த்து அட்டைகளில் முன்னணி நடிகைகள் தான் இடம் பெறுவார்கள். அவற்றிலும் நதியாவிற்கு தனி இடமுண்டு.

அப்படி 1986ம் ஆண்டில் தன்னுடைய முதல் காலண்டர் போட்டோ ஷுட்டில் எடுக்கப்பட்ட ஒரு காலண்டரைப் பகிர்ந்து, “1986ல் என்னுடைய முதல் காலண்டர் ஷுட்டின் ஆச்சரியம்” எனக் கூறியுள்ளார்.