ஏய் இது அது தானே…” – ராஷ்மிகா-வை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..! – என்ன காரணம் தெரியுமா ??

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு கன்னடம் பல மொழிகளில் பிசியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் நடித்த கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டவர். மேலும் இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் போன்ற பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு அவர்களுடன் தற்போது சேர்ந்து நடித்த படம் சீரிலேறு நிக்கெவரு திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகா மந்தானா போட்டோஷூட் எடுத்துள்ளார். அதில் அவர் பல்வேறு ரியாக்சன் கொண்டா புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்கள் வடிவேலு மீம்ஸ்களுடன் ஒத்துப் போனதால் ரசிகர்கள் இதனை இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகிறார்கள். ராஷ்மிகா மந்தானா மேலும் தனது இணையதளத்தில் வடிவேல் சார் தான் மிக அருமையாக செய்து உள்ளார் என்றும் தன்னால் முடியவில்லை என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி சிலபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இது அந்த எடிட்டிங் தானே என்று மீம்ககளை பறக்க விட்டு வருகிறார்கள்.

ஆனால்..ஏன்  இப்படி மீம்கள் வெளியிட்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.