
காஜல் அகர்வால் பொம்மலாட்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கில் ராம்சரண் நடித்த மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் தமிழில் நான் மகான் அல்ல என்ற வெற்றி திரைப்படத்தில் நடித்து ஒரு முன்னணி நடிகையாக ஆனார்.
அதற்கு பிறகு மோதி விளையாடு சரோஜா போன்ற படங்களில் நடித்திருந்தார் அந்த திரைப்படங்கள் எதுவும் வெற்றியடையவில்லை.பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.
தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. சமீபத்தில் இவரின் ஹே சினாமிகா படம் வெளியாகி சரியா போகவில்லை.
சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வாலுக்கு மகன் பிறந்துள்ளதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.
காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு கர்ப்பமாக இருக்கும் சமயத்தில்,தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரணுடன் இணைந்து கடைசியாக ஆச்சாரியா படத்தில் நடித்து முடித்தார். தற்போது குழந்தை பெற்ற பிறகும் கூட உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்தி வரும் காஜல் அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் தாறுமாறு வைரலாகி வருகிறது.